இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தங்கக் கடத்தல் அதிகரிப்பு!
Mayoorikka
2 years ago

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தங்க கடத்தல் அதிகரித்துள்ளதாக
இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு மாத காலப்பகுதியில் தங்க கடத்தல் தொடர்பான 08 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் இலங்கையர்களும் இந்தியர்களும் ஈடுபட்டுள்ளதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், தங்கம் கடத்தல் தொடர்பான விதிமுறைகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



