தரப்படுத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படும் - பிச் ரேட்டிங்ஸ் நிறுவனம்
Kanimoli
2 years ago

இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்தால் அல்லது மேலும் நீண்டகாலத்திற்கு நீடித்தால், தரப்படுத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படும் என பிச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நுகர்வு பொருட்கள், மின்சார உற்பத்தி, வீடமைப்பு நிர்மாணம் ஆகிய துறைகளுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என பிச் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
பணவீக்கம், இறக்குமதி வரையறை, வட்டி வீதம் அதிகரிப்பு என்பன காரணமாக அடுத்த 12 முதல் 18 மாத காலத்தில் இலங்கையின் தேசிய நிறுவனங்கள் ஆபத்தான நிலைமையை எதிர்நோக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.



