வடக்கில் சீன இராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துகின்றதாகபுலனாய்வு பிரிவு எச்சரிகை
Kanimoli
2 years ago

இலங்கையின் வடக்கில் கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துகின்றதாக தமிழ்நாடு புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழ்நாடு கரிசனை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மாநில புலனாய்வு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அயல் நாட்டில் சீனாவின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள மாநில புலனாய்வு பிரிவு, கரையோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.



