உலகின் பாதுகாப்பான சுற்றுலாதளப் பட்டியலுக்குள் இடம் பிடித்த இலங்கை!
Reha
2 years ago

WorldPackers.com என்ற பிரபலமான இணையபயண சமூக தளத்தின்படி, உலகில் பயணம் செய்யக்கூடிய முதல் 13 பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12வது இடத்தைப் பிடித்துள்ளது.
இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கு மத்தியிலும், உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்துக்குள் ரூபாயின் மதிப்பு நிலையாகி, நாடு மிகச் சிறந்த நிலைக்கு வரும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



