சுற்றுலா பயணிகளிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
Prathees
2 years ago

கடும் மழை காரணமாக எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் அமைந்துள்ள ராவணன் நீர்வீழ்ச்சியின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
இதனால், சுற்றுலா பயணிகள் ராவணன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பயணம் செய்வதையும், அதன் அருகே நீராடுவதையும் தவிர்க்குமாறு பொலிசார் அறிவுறுத்துகின்றனர்.
இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



