புகையிரதங்களின் திருத்தப்பட்ட நேர அட்டவணை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் - புகையிரதத் திணைக்களம்
Kanimoli
2 years ago

இலங்கையில் காலை வேளையில் இயங்கும் அலுவலக புகையிரதங்களின் திருத்தப்பட்ட நேர அட்டவணை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மாலையில் இயக்கப்படும் அலுவலக புகையிரதங்களின் நேர அட்டவணையிலும் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மை நாட்களாக பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதால், புகையிரதங்கள் கடந்து செல்லும் நிலையங்களில் நிறுத்தப்படும் நேரம் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு கோட்டைக்கும் பாணந்துறைக்கும் இடையிலான புகையிரத பாதைகளின் கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



