முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான ஈஸ்டர் வழக்கு 10 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
#Easter Sunday Attack
#Maithripala Sirisena
Prasu
3 years ago
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகளை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்க கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றது.
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.