வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை!
Mayoorikka
2 years ago

தேசிய பூங்கா, தேசிய மிருக காட்சிசாலை மற்றும் வனாந்தரங்களை பார்வையிடுவதற்காக வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தநாட்டு நாணய அலகு மூலம் அனுமதிப் பத்திரங்களை வழங்க வனஜீராசிகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இணையத்தளம் ஊடாக அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான முறைமைப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த கலந்துரையாடல்களுக்கமைய இணைத்தளம் ஊடாக அனுமதிப் பத்திரங்களை வழங்கும் முறைமைப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டின் வருமானத்தை அதிகரிப்தே இதன் பிரதான நோக்கமாகும். அத்துடன் குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் இரு மாதங்களில் நிறைவு பெறவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.



