9 மாதங்களில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 7500 முறைப்பாடுகள்
Prathees
2 years ago

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 7இ500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
தமக்கு அதிகாரம் அற்ற முறைப்பாடுகள் அவற்றில் உள்ளதாக அதன் தலைவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.
அண்மையில் காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கையினால் சிறுவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளானதாகவும் சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிராகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பல தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
அந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் தமது அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.



