விஷம் வைத்து கொல்லப்பட்ட அதிக எண்ணிக்கையிலான நாய்கள்: பொலிஸார் விசாரணை
Prathees
2 years ago

பௌர்ணமி தினமான நேற்று கலேவெல,பட்டிவெல பிரதேசத்தில் தனிநபர் ஒருவரால் அதிகளவான நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டமை அப்பகுதி மக்களை கவலையடையச் செய்துள்ளது.
இது தொடர்பில் பிரதேசவாசிகளிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் கலேவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பல கர்ப்பிணி பெண் நாய்களும், குட்டி நாய்களுமே இவ்வாறு கால்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பிரதேசத்தைதைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் மீது அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர், ஆனால் அவர் குற்றச்சாட்டை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறறது.



