உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பார்வையிட வருகை தரும் ரசிகர்களை ஈர்க்க இலங்கை முயற்சி!

Mayoorikka
2 years ago
உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பார்வையிட வருகை தரும் ரசிகர்களை ஈர்க்க இலங்கை முயற்சி!

டோஹாவில் நடைபெறவுள்ள பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியைப் பார்வையிட வரும் இரசிகர்கள் தங்குவதற்கு ஏற்ற இடமாக நீர்கொழும்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 20 ஆம் திகதி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் மொத்தம் 64 போட்டிகள் இடம்பெறவுள்ளதோடு 32 அணிகள் மோதுகின்றன.

டோஹாவில் குறைந்த அளவு தங்குமிட வசதிகள் இருப்பதாலும், மற்ற மத்திய கிழக்கு நாடுகளில் அதிக செலவுகள் காரணமாகவும் ரசிகர்களை கவர இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

டுபாய், அபுதாபி பிரபலமான சுற்றுலாத் தலங்களாக இருந்தாலும், இலங்கையில் குறைந்த விலையில் தங்கும் செலவுகள் உட்பட இதர செலவுகள் காரணமாக ரசிகர்களை ஈர்க்க முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை கொண்டுள்ளார்.

குறிப்பிட்ட நாடுகளின் போட்டிகள் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒருமுறை திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் வித்தியாசமான சூழ்நிலையை அனுபவிக்க இலங்கைக்கு பயணிக்க போதுமான நேரம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!