அதிவேக நெடுஞ்சாலையின் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலி 6 பேர் காயம்
Kanimoli
3 years ago
அதிவேக நெடுஞ்சாலையின் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துருகிரிய வெளியேற்றத்தில் மகிழுந்து ஒன்று ஜீப் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மாலபே பகுதியை சேர்ந்த 57 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.