காலி முகத்திடலில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பலர் கைது
Kanimoli
2 years ago

காலி முகத்திடலில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி முகத்திடல் மைதானத்திற்குள் உள்நுழைந்து பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பலர் ஓடிச் செல்ல முற்பட்டபோதும் பொலிஸார் அவர்களை துரத்தி துரத்தி கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அங்கு கடும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அங்கு குழுமியிருந்த பொதுமக்களிடத்திலும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.



