மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து: பொலிஸ் அதிகாரி பலி! மேலும் மூவர் படுகாயம்

பேருவளை மொரகல்ல சுற்றுலாப் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் காயமடைந்து நாகொட பொது வைத்தியசாலையில் இன்று (09) காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸ்மா அதிபர் லலித் பத்ம குமார தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் பேருவளை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் சதுரங்க கஸ்தூரியாராச்சி என பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஊழல் தடுப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி ஆவார்.
இவர் மோட்டார் சைக்கிளில் கான்ஸ்டபிளுடன் வந்து கொண்டிருந்த போதுஇ எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்த நால்வரும் களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நிலையத் தளபதி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நிலையத் தளபதி மேலும் தெரிவித்தார்.
பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



