இன்றைய சமூகத்தின் நிலையை போக்க நாயகத் நபியின் தரிசனம் பெரும் உதவியாக உள்ளது - ஜனாதிபதி

முஹம்மது நபியின் போதனைகளின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் மூலம் ஒருவர் ஆன்மீக ரீதியில் மட்டுமன்றி சமூக ரீதியாகவும் வெற்றியை அடைய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவத்துள்ளார்.
முஹம்மது நபியின் பிறந்தநாளான ஈத் மீலாதுன் நபியை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள செய்தியிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய சகோதரர்களாலும் போற்றப்படும் முஹம்மது நபியின் பிறந்த தினம் இன்று (09) கொண்டாடப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய பக்தர்களின் மதத் தலைவராக முஹம்மது நபியின் கோட்பாடு முன்னெப்போதையும் விட இன்று சமூகத்தின் நிலைமையைப் போக்க உதவும் என்பது தனது நம்பிக்கை என்று ஜனாதிபதி தனது செய்தியில் கூறினார்.
முஹம்மது நபி போதித்த பண்புகளுடன் வாழ்வதும்இ அவற்றைக் கடக்க முயற்சிப்பதை விட புரிந்துணர்வோடு மற்றவர்களுடன் பழகுவதும் அவருக்குச் செய்யும் மரியாதை என்று ஜனாதிபதி கூறினார்.
முஹம்மது நபியின் வருகையும் அவரது பார்வையும் முழு மனித சமூகத்தின் பாதுகாப்பையும் அவர்களின் மரியாதையையும் குறிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.



