திடீர் உடல்நலக் குறைவு - நேபாள ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி

#Bangladesh #President
Prasu
2 years ago
திடீர் உடல்நலக் குறைவு - நேபாள ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி

நேபாள நாட்டின் அதிபராக இருப்பவர் பித்யா தேவி பண்டாரி (61). இவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 

இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

இதுதொடர்பாக, அதிபரின் செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 

அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை காணப்படுகின்றன. இதனால், அவர் காத்மண்டுவில் உள்ள மகாராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!