ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த மகிந்த ராஜபக்ச
Prathees
2 years ago

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச இன்று முதல் தடவையாக பொது பேரணியில் இணைந்து கொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் "ஒன்றாக எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்" என்ற பேரணியிலே இணைந்து கொண்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷஇ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக நியமிக்கப் பங்களித்த இளைஞர்கள் எதிர்பார்த்த மாற்றத்தை தமது அரசாங்கத்தால் ஏற்படுத்த முடியவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.



