இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 20,000 ரூபா மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானம்
Prathees
2 years ago

2022-23 பருவத்தில் நெல் சாகுபடிக்கு 70 சதவீதம் ரசாயன உரங்களையும், 30 சதவீதம் இயற்கை உரங்களையும் பயன்படுத்த வேளாண் துறை பரிந்துரை செய்துள்ளது.
விவசாயிகளுக்கு சிறந்த இயற்கை உரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்த பருவத்தில் கழிவுகளை இயற்கை உரங்களாக விவசாயிகளுக்கு விற்பனை செய்ய எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, எதிர்வரும் காலங்களில் நெற்செய்கைக்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 20,000 ரூபா மானியமாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.



