சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 17ஆம் இடம்

Mayoorikka
2 years ago
சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 17ஆம் இடம்

‘கோண்டே நாஸ்ட் டிரவலர்’ என்ற சுற்றுலா இதழானது தமது வாசகர்கள் தெரிவுசெய்த, உலகில் சுற்றுலா செல்வதற்கhன சிறந்த நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றது. 

அதன்படி இந்த ஆண்டு சுற்றுலா செல்வதற்கு உலக அளவில் சிறந்த 20 நாடுகளின் பட்டியலில் இலங்கை 88.01 புள்ளிகளைப் பெற்று 17வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் கடந்த ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் 5ஆம் இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சுற்றுலாவை பிரதான வருவாய் ஆதாரமாகக் கொண்ட இலங்கை பொருளாதாரத்தில் மீண்டெழுவதற்காக மீண்டும் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்ட முயன்றுவருகின்றது. 

அதேபோல் சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் 3 இடங்களையும் முறையே போர்த்துக்கல், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகள் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!