கடந்த 4 மாதங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழப்பு!
Mayoorikka
2 years ago

2022 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி வரை இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதிக்குள் 29 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் 64 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 15 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.



