காஞ்சன விஜயசேகர தமது சிறப்புரிமையை மீறிவிடார்: சபாநாயகரிடம் தயாசிறி முறைப்பாடு!

Mayoorikka
2 years ago
காஞ்சன விஜயசேகர தமது சிறப்புரிமையை மீறிவிடார்: சபாநாயகரிடம் தயாசிறி முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றில் முறையிட்டார்.

தாம், வசிக்கும் வீட்டின் மின்சாரக் கட்டணம் சுமார் 11லட்சம் ரூபாய்கள் நிலுவைகளாக இருப்பதாக கூறி நேற்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தமையானது, தமது சிறப்புரிமையை மீறும் செயல் என்று அவர் குறிப்பிட்டார்.

தாம் மாத்திரமே மின்சாரக்கட்டணத்தை செலுத்தவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தாம் வசிக்கும் வீட்டின் மின்சாரக்கட்டணம், தாம் பயன்படுத்திய மின்சாரத்திற்கான கட்டணம் அல்ல என்றும் அது ஏற்கனவே அங்கு வசித்த இரண்டு அமைச்சர்களின் கட்டணங்களும் சேர்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ஏ.எல்.எம் அத்தாவுல்லா போன்ற பலர் வசிக்கும் வீடுகளின் பல லட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்களும் செலுத்தப்படாமல் உள்ளதாக தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.

எனினும் அந்த கட்டணங்கள் அவர்களின் சொந்த பயன்பாட்டு கட்டணங்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!