3569 இலங்கையர்கள் தென்கொரியா பயணமாகியுள்ளனர்
Mayoorikka
2 years ago

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதிகள் 3569 இலங்கையர்கள் தென் கொரியாவுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர்.
உற்பத்தி துறைக்காக 2795 பேரும் மீன்பிடித்துறைக்கு 724 பேரும் கட்டுமாணத்துறைக்கு 49 பேரும் விவசாயத்துறைக்கு இருவரும் பயணமாகியுள்ளனர்.
இலங்கை தென்கொரியாவுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்டுள்ள இராஜதந்திர ஒப்பந்தத்துக்கு அமைய, மேலும் இலங்கையர்களை தென்கொரியா பணியாளர்களாக இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும் அந்த ஒப்பந்தம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு கிடைத்தவுடன் இலங்கைப் பணியாளர்களை தென்கொரியாவுக்கு அனுப்பும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



