வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்க பாகிஸ்தானுக்கு சென்ற ஹாலிவுட் நட்சத்திரம் ஏஞ்சலினா ஜோலி
#Pakistan
#Flood
#Actress
Prasu
2 years ago

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்க ஹாலிவுட் நட்சத்திரம் ஏஞ்சலினா ஜோலி ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பினராக செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார் .
நாட்டையே பாதித்துள்ள பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் நலம் விசாரிப்பதற்காகவே இவ் விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளுடனும் அவர் கலந்துரையாடியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் எந்தவித அறிவிப்பும் இன்றி பாகிஸ்தானுக்கு சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



