பொதுமக்களின் பணத்தை சிக்கனமாகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்த ஜனாதிபதி வலியுறுத்து

நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையில் அரசாங்கம் எதிர்நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் செலவழிக்கும் பொதுமக்களின் பணத்தை சிக்கனமாகவும், அதிகபட்ச வினைத்திறனுடனும் பயன்படுத்த அனைத்து அதிகாரிகளும் முழு முயற்சி எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, அரச செலவின முகாமைத்துவத்திற்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் இன்று (செப்டம்பர் 09) எழுத்துமூல பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் அந்த நிபந்தனைகளுக்கு அமைவாக தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் இந்த பணிப்புரைகளை விடுத்துள்ளார்.



