இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்வதாக குற்றம் அதிகரிப்பு

Kanimoli
2 years ago
இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்வதாக குற்றம் அதிகரிப்பு

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அண்மையில் இரண்டு தமிழ் ஊடகவியலாளர்கள் பயங்கரவாத செயற்பாடு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அடுத்த சில நாட்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் தொடர்ச்சியான செயற்பாடுகளை கண்டிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடக பத்திரிகை சுதந்திரத்தை ஆபத்தான முறையில் குறைமதிப்பிற்குட்படுத்தும் சட்டவிரோத மற்றும் தவறான நடைமுறைகள் பயன்படுத்துவதை நிறுத்துமாறு குறித்து அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான பெரும் அத்துமீறலாக உள்ளது என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு என்பது ஊடகச் சுதந்திரத்தை வலியுறுத்தும் ஒரு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமாகும்.

பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விகிரமசிங்கவிற்கு அழைப்பு விடுப்பதாக குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழர் பிரச்சினையைப் பரப்பும் எந்தவொரு ஊடகவியலாளரையும் வேட்டையாடுவதைப் பாதுகாப்புப் படையினர் நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களான பாலசிங்கம் கிருஷ்ணகுமார் மற்றும் செல்வகுமார் நிலாந்தன் ஆகியோர் பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளமையே இதற்கு ஒரு உதாரணமாக கூற விரும்புவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

விடுதலை புலிகளுக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் அழைக்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!