காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராக காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Kanimoli
2 years ago
 காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராக காலிமுகத்திடல்  போராட்டக்காரர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராகவும் காலிமுகத்திடல் பகுதியில் போராட்டக்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இது வரை கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறும் வலியுறுத்தி இவ் எதிர்ப்பு ஆர்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிர்நீத்த போராட்டக்காரர்களுக்கு அஞ்சலி 
மேலும், அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நிகழ்வும் காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்று வருகின்றது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!