IMF உடன்படிக்கை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் சஜித் கேள்வி
Mayoorikka
2 years ago

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில் இன்று கேள்வி எழுப்பினார்.
இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் கருத்து கூறுவதை தவிர்த்து சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை சபைப்படுத்த வேண்டும்.
இதற்கான நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சர்வதேச நாணய நிதியத்துடன், இதுவரையில் இறுதி உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த உடன்படிக்கை தொடர்பில் இணக்கபாடு மாத்திரமே ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



