தேரேறி அருள் பாலித்தார் அன்னதானக் கந்தனான செல்வச்சந்நிதியான்!

Mayoorikka
2 years ago
தேரேறி அருள் பாலித்தார் அன்னதானக் கந்தனான செல்வச்சந்நிதியான்!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது.
 
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று தேரேறி வலம் வந்தார்.

இன்று காலை விசேட பூஜைகள் இடம்பெற்று, அன்னதானக் கந்தன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானோருடன் திருவிழாக்கள் நடத்தப்பட்டன. 

இந்த நிலையில், இவ்வருடம் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் அன்னதான கந்தனின் தேர் திருவிழாவில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

san
sannith
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!