மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்க்கை வரலாறு

Kanimoli
2 years ago
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்க்கை வரலாறு

இங்கிலாந்து நாட்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, அந்த நாட்டின் ராணியாக ஆனவர், அவரது மகள் எலிசபெத். இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்படுகின்ற அவருக்கு அப்போது வயது 25. அப்போது இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில், அதன் பின்னர் சர் ஆண்டனி ஈடன் தொடங்கி போரிஸ் ஜான்சன் வரை 13 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி உள்ளார். தற்போது இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரசை ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்துள்ளார். 

அந்த வகையில் ராணி இரண்டாம் எலிசபெத் கண்ட இங்கிலாந்தின் 15-வது பிரதமர் என்ற சிறப்பை லிஸ் டிரஸ் பெறுகிறார். ராணி இரண்டாம் எலிசபெத் பதவிக்காலத்தில் இங்கிலாந்து 3 பெண் பிரதமர்களைக் கண்டிருக்கிறது. அவர்கள், மார்கரெட் தாட்சர், தெரசா மே, லிஸ் டிரஸ் ஆவார்கள்.  11 பிரதமர்கள் கன்சர்வேடிவ் கட்சியினர். 4 பேர் மட்டுமே தொழிற்கட்சியை சேர்ந்தவர்கள்.1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத் அலெக்சேன்ட்ரா மேரி.அவர் பிறந்தபோது இங்கிலாந்தை அவரது தாத்தா ஐந்தாம் ஜார்ஜ் ஆண்டு கொண்டிருந்தார்.

அவர் 1936-ல் மரணமடைந்தபோது மன்னராக மூத்த மகன் எட்டாம் எட்வர்டு அரியணை ஏறினார். ஆனால் குறுகிய காலத்திலேயே தன்னுடைய காதலுக்காக மன்னர் பதவியைத் துறந்தார். அதைத் தொடர்ந்து எலிசபெத்தின் தந்தையான ஆல்பர்ட் ஆறாம் ஜார்ஜ் என்ற பெயருடன் மன்னரானதும் 10 வயதில் பட்டத்து இளவரசி ஆனார் எலிசபெத். 1952 ஆம் ஆண்டில் தந்தை மறைந்ததும் இங்கிலாந்தின் ராணியாக முடிசூடினார் இரண்டாம் எலிசபெத்.

70 ஆண்டு காலம் இங்கிலாந்தை ஆண்ட எலிசபெத் அந்நாட்டு வரலாற்றில் அதிக ஆண்டுகள் ஆண்ட ராணி என்ற பெருமையைப் பெற்றவர், கிரேக்கம் மற்றும் டென்மார்கின் இளவரசராக இருந்த பிலிப்புடன் காதல் கொண்ட நிலையில் தனது பட்டத்தை துறந்து 1947-ல் ராணி எலிசபெத்தின் கரம் பற்றினார் பிலிப்.

கணவர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராணி எலிசபெத்தின் உடல்நிலையும் மோசமானது. ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோர் அரண்மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் பால்மோரல் எஸ்டேட்டில் கூடி இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பின் காரணமாக நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்னர் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸுக்கு முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த அக்டோபர் மாதம் முதலே 96 வயதாகும் ராணி எலிசபத்துக்கு அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. 

நிற்க, நடக்க சிரமப்பட்டு வந்த அவர் ஸ்காட்டிஷ் அரண்மனையில் சிகிச்சை பெற்றார்.  இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமாகி நேற்று காலமானார். உலகையே உள்ளங்கையில் வைத்து ஆட்சி செய்த பெயர் இங்கிலாந்துக்கு உண்டு. அந்த நாட்டிற்கு 70 ஆண்டுகளாக ராஜ மாதாவாக இருப்பவர் தான் இரண்டாம் எலிசபத் மகாராணி. ஜனநாயகம் தழைத்தோங்கும் காலத்திலும் இங்கிலாந்து ராஜ குடும்பம் மட்டும் வசீகரம் குறையாமல் அப்படியே இருக்கிறது. 

இதற்கு இரண்டாம் எலிசபத் ராணியின் புரட்சிகளும் காரணம் தான். ராஜா, ராணி மட்டுமே வரி வசூலித்த காலம் போய், அரசாங்கத்திற்கு ராஜ குடும்பம் வரி செலுத்தும் முறையையும் நடைமுறைப்படுத்தினார் இரண்டாம் எலிசபத் ராணி. அதுமட்டுமல்ல தனது மாளிகைக்கு உட்பட்ட பகுதியை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தபோதும் கூட அதை பொது வாக்கெடுப்பு மூலம் எதிர்கொண்டு சர்வதேச கவனத்தைப் பெற்றார். உணையில் இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபத்துக்கு வானளாவிய அதிகாரங்கள் இருந்தும் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக்கு தலை வணங்கி வாழ்ந்து வருபவர் எலிசபத் ராணி. எல்லோரையும் ஜனநாயகப்படுத்தும் அவரது அணுகுமுறைக்கு ஜனநாயக நாடுகளிலும் வரவேற்பு உண்டு.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் உலகில் எந்த நாட்டிற்கும் செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை. அவர் கார் ஓட்ட ஓட்டுநர் உரிமமும் தேவையில்லை. கிட்டத்தட்ட 15 நாடுகள் ராணியின் ஆளுமையின் கீழ் உள்ளன. அந்த நாடுகளில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய அரசை அமைக்கவோ ஆட்சியில் இருக்கும் அரசைக் களைக்கும் அதிகாரமும் உண்டு. அந்த நாடுகளில் வேண்டிய நிலப்பரப்பை தனதாக்கிக் கொள்ளும் உரிமையும் அவருக்கு உண்டு. 

ஆனால் அவர் அது மாதிரியான எந்த உரிமைகளையும் பயன்படுத்தியதில்லை. அவரது எளிமையைச் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால், சவுதி மன்னர் இங்கிலாந்து வந்தபோது அவரை தனது காரில் ஏற்றி தானே அதை ஓட்டிக் கொண்டு ஸ்காட்லாந்து அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை. அதை இடித்துரைக்கவே ராணி அவ்வாறாக காரோட்டியாக இருந்ததாக 
கூறப்படுவதும் உண்டு. ராணி இரண்டாம் எலிசபத் எந்த நாட்டின் மீதும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி படையெடுத்ததில்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் அவர் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை நேற்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது.அதைத் தொடர்ந்து அரண்மனையிலும், அரசு அலுவலகங்களிலும் அந்நாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.பால்மோர், பக்கிங்காம், விண்ஸர் அரண்மனைகளுக்கு வந்த மக்கள் ராணி எலிசபெத்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

ராணி எலிசபெத் மறைந்ததுமே அவரது 73 வயது மகன் சார்லஸ் மன்னர் ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் மன்னர் என அழைக்கப்படுவார். மன்னர் சார்லஸ் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் தனது அன்பிற்குரிய தாய் ராணி எலிசபெத்தின் மரணம் தனக்கும் குடும்பத்தாருக்கும் மிகப் பெரும் சோகம் என்றும் அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ராணி எலிசபெத்தின் உடல் எடின்பர்கில் உள்ள அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும், பின்னர் லண்டன் பக்கிங்காம் அரண்மனை கொண்டு செல்லப்பட்டு 10-வது நாளில் அடக்கம் செய்யப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!