அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் கோட்டையில் ஆர்ப்பாட்டம்
Mayoorikka
2 years ago

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட மூவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் இன்று மாலை கோட்டையில் கூடியது.
கோட்டை போதி விகாரைக்கு முன்பாக கூடிய பிக்குகள் உள்ளிட்ட மாணவர்களை உடனடியாக கலைந்து செல்லுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், பிக்குகள் உள்ளிட்ட தரப்பினர் பின்னர் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.



