இலங்கையில் அண்மைக்காலமாக போதைப் பொருள் வர்த்தகத்தில் பெண்களின் நாட்டம் அதிகரித்து வருகிறது - கலால் திணைக்களம்

Kanimoli
2 years ago
இலங்கையில் அண்மைக்காலமாக போதைப் பொருள் வர்த்தகத்தில் பெண்களின் நாட்டம் அதிகரித்து வருகிறது - கலால் திணைக்களம்

இலங்கையில் அண்மைக்காலமாக போதைப் பொருள் வர்த்தகத்தில் பெண்களின் நாட்டம் அதிகரித்து வருவதாக கலால் திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் முதல் ஏழுமாதங்களில் கலால் திணைக்களம் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் 18,164 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது.

இவற்றில் 14,562 சுற்றிவளைப்புகள் கலால் வரிச் சட்டத்தின் கீழும், அபாயகர ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2801 சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதே போன்று புகையிலை மற்றும் மதுபான விற்பனைச் சட்டத்தின் கீழ் 801 சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்குறித்த சுற்றிவளைப்புகளின் போது 15,290 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 2764 பெண்களும் உள்ளடங்கியுள்ளனர்.

அதன் மூலம் அண்மைக்காலங்களில் போதைப் பொருள் வர்த்தகத்தில் பெண்களின் நாட்டம் அதிகரித்து வருவதாக கலால் திணைக்கள புள்ளிவிபரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!