கட்டுநாயக்காவில் கோத்தாவை வரவேற்க சென்ற குழு: இதோ புகைப்படங்கள்
Prathees
2 years ago

மக்களின் எதிர்ப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 3 நாடுகளில் பதுங்கியிருந்த நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (03) நாடு திரும்பினார்.
இதன்போது, அவரை வரவேற்க பல மக்கள் பிரதிநிதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தானந்த அளுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜேசேகர, டிரான் அலஸ், மதுர விதானகே உள்ளிட்ட அமைச்சர்கள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதோடு, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த வேறு எவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





