ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு - மதகுரு உள்பட 18 பேர் உயிரிழப்பு - 21பேர் படுகாயம்

#Afghanistan #BombBlast #Death
Prasu
2 years ago
ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு - மதகுரு உள்பட 18 பேர் உயிரிழப்பு - 21பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் மதகுரு உள்பட 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 21-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியானது. 

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!