400 சினூக் ஹெலிகாப்டர்களை பயன்பாட்டிலிருந்து நிறுத்துவதாக அறிவித்த அமெரிக்க ராணுவம்

#America
Prasu
2 years ago
400 சினூக் ஹெலிகாப்டர்களை பயன்பாட்டிலிருந்து நிறுத்துவதாக அறிவித்த அமெரிக்க ராணுவம்

போயிங் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சினூக் ஹெலிகாப்டர் அமெரிக்க ராணுவ வீரர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லவும், சரக்குகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தி வந்தனர். 

இதற்கிடையே, அமெரிக்க பாதுகாப்புப் படையில் பயன்பாட்டில் உள்ள 400 சினூக் ஹெலிகாப்டர்களை பயன்பாட்டிலிருந்து நிறுத்துவதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. 

அடிக்கடி எஞ்சின் தீப்பிடித்து விபத்துக்குள்ளாவதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தது. இந்திய விமானப் படையில் தற்போது 15 சினூக் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், அமெரிக்க ராணுவம் அனைத்து சினூக் ஹெலிகாப்டர்களையும் நிறுத்துவதற்கான முழு விவரங்களை அளிக்கும்படி போயிங் நிறுவனத்திடம் இந்தியா சார்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

அமெரிக்கா அளிக்கும் விளக்கத்திற்கு பிறகு, இந்திய விமானப் படையும் சினூக் ரக ஹெலிகாப்டர் பயன்பாட்டை நிறுத்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!