மலேசியாவின் 97 வயதான மலேசியா முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுக்கு கொரோனா தொற்று உறுதி
#Malasia
#PrimeMinister
#Covid 19
Prasu
2 years ago

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 97 வயதான அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவரது உடல் நிலை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மகாதீர் முகமது பல முறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் 1981 முதல் 2003 வரை தொடர்ந்து 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த மகாதீர் முகமது, 2018-ம் ஆண்டு தனது 92 வயதில் மீண்டும் மலேசியா பிரதமரானது மூலம் உலகின் மிகவும் வயதானவர் என்கிற பெருமையை பெற்றார்.
எனினும் கூட்டணி குழப்பங்களால் 2020-ல் அவரது அரசு கவிழ்ந்து அவர் பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.



