இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை - சரத் பொன்சேகா
Kanimoli
2 years ago

அரச பயங்கரவாதம் செயற்படும் நாடான இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த அரச பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒரு பைசாகூட இந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டார்
நாங்கள் பசியால் சாகத் தயாராக இருந்தாலும் ஐந்து காசுகூட அனுப்ப வேண்டாம். இந்த அரசுக்கு உதவாதீர்கள் எனவும் கூறிய சரத் பொன்சேகா, IMF இல் என்ன கிடைக்கிறதோ அதுவே கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.



