இந்தோனேசியாவில் பேருந்து நிலையத்தில் லாரி மோதியதில் பள்ளி குழந்தைகள் உட்பட 10 நபர்கள் மரணம்

#Indonesia #Accident #Death
Prasu
2 years ago
இந்தோனேசியாவில் பேருந்து நிலையத்தில் லாரி மோதியதில்  பள்ளி குழந்தைகள் உட்பட 10 நபர்கள் மரணம்

இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்தாவில் இருக்கும் பிகசி நகரத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியை சேர்ந்த சிறுவர்கள், நேற்று வகுப்பு முடிந்த பின் வீட்டிற்கு செல்ல அருகில் இருக்கும் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக கார்த்திருந்துள்ளார்கள். அந்த சமயத்தில் திடீரென்று லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதிவேகத்தில் வந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.

இதில் மின்கம்பம் சாய்ந்து சாலையில் சென்ற வேன் மீது விழுந்து விட்டது. இந்த பயங்கர விபத்தில் பள்ளி சிறுவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மின்கம்பம் விழுந்ததில் வேனை ஓட்டி வந்த ஓட்டுனரும் பலியானார்.

மேலும், பலர் பலத்த காயமடைந்திருக்கிறார்கள்.  அதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று பலத்த காயங்களுடன் கிடந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். விபத்தை உண்டாக்கிய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!