பயணிகளை ஏற்றிச் சென்ற விமானத்தில் விமானிகள் திடீரென சண்டையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு

Kanimoli
2 years ago
பயணிகளை ஏற்றிச் சென்ற விமானத்தில் விமானிகள் திடீரென சண்டையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு

பயணிகளை ஏற்றிச் சென்ற விமானத்தில் விமானிகள் திடீரென சண்டையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு அண்மையில் பறப்பில் ஈடுபட்ட ஏர் பிரான்ஸ் விமானத்திலேயே விமானிகளுக்கிடையே இந்த சண்டை நடைபெற்றுள்ளது.

குறித்த விமானத்தை 2 விமானிகள் இயக்கியதுடன் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்துள்ளனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது இரண்டு விமானிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி அடிதடியில் ஈடுபட்டனர்.

விமான ஊழியர்கள் சமாதானப்படுத்தியபோதிலும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து விமானம் பெரும் பரபரப்புக்கு இடையே பத்திரமாக பாரிசில் தரையிறங்கியது. இதுகுறித்து விசாரணை செய்த விமான நிறுவனம் இரண்டு விமானிகளையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!