தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக குரல் எழுப்பும் சி.வி விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும் -சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக குரல் எழுப்பும் சி.வி விக்னேஸ்வரன் (C.V. Vigneswaran) பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டதுபோல, புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், ஊடகவியலாளர் ஒருவர் நேற்று (30-08-2022) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, பொன்சேகா இவ்வாறு காட்டமாக பதிலளித்தார்.
புலிகளை மீண்டும் தாலாட்டுவதற்கு விக்னேஸ்வரன் முற்படுகின்றாரா? அவருக்கு வயதுபோய் விட்டது. நீதியரசர் பதவியை வகித்த ஒருவர் அவர்.
எதற்காக இப்படி கதைக்கின்றார். அவருக்கு பைத்தியமாக இருக்க வேண்டும். அவர் கூறும் வழியில் எமக்கு டொலர் தேவையில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



