அரசியல்வாதிகளின் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை
Prathees
2 years ago

அரசியல்வாதிகளின் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன
2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ளதுடன், விவாதம் இன்று மாலை 05.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்தார்.



