அமெரிக்காவில் தொடர் மழையால் தண்ணீர் பஞ்சம் - 1.5 லட்சம் மக்கள் குடிநீர் இன்றி அவதி

#America #Flood
Prasu
2 years ago
அமெரிக்காவில் தொடர் மழையால் தண்ணீர் பஞ்சம் - 1.5 லட்சம் மக்கள் குடிநீர் இன்றி அவதி

அமெரிக்க நாட்டில் உள்ள மிஸ்ஸிப்பி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இதன் காரணமாக 2 நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் பஞ்சத்தால் 1.5 லட்சம் பொதுமக்கள் குடிப்பதற்கும், பல் துலக்குவதற்கும் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 

ஏனெனில் தண்ணீர் சுத்திகரிக்கப்படாததால் குடிநீரில் கிருமிகள் அதிக அளவில் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கிருமிகள் கலந்துள்ள தண்ணீரால் பல் துலக்க கூட முடியாது என்றும் கூறுகின்றனர். 

மேலும் குடிநீர் பிரச்சினை ஆனது விரைவில் சரி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு சீரான முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படும் என மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!