நாட்டின் பல பகுதிகளில் கனமழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Prathees
2 years ago

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை, இன்று இரவு முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தனகலு, களு, களனி, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகளில் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக் கூடும் எனவும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் மேலும் கோரியுள்ளது.



