மொஸ்கோவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே நெருங்கிய பாதுகாப்பு உறவுகளை வெளிப்படுத்த ரஷ்யா கூட்டு இராணுவப் பயிற்சி!
Reha
2 years ago

உக்ரைன் போருக்கு மத்தியில் மொஸ்கோவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே நெருங்கிய பாதுகாப்பு உறவுகளை வெளிப்படுத்த சீனாவின் படைகளுடன் சேர்ந்து வொஸ்டெக் என்னும் பெரும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தப்போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 1-7 திகதிகளில் ரஷ்யாவின் தூர கிழக்கு மற்றும் ஜப்பான் கடற்பரப்புகளில் இந்த கூட்டு இராணுவ பயிற்சி இடம்பெற உள்ளது.
இந்த கூட்டு இராணுவ பயிற்சியில் 50,000 துருப்புக்கள் மற்றும் 140 விமானங்கள் மற்றும் 60 போர்க்கப்பல்கள் உட்பட 5,000 ஆயுதப் பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த பயிற்சி அமைய உள்ளது.
இந்த பயிற்சியானது அமெரிக்காவை சீண்டுவதுடன் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.



