கர்ப்பிணிகள் – குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு!
Mayoorikka
2 years ago

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தற்போது வழங்கப்படும் 20,000 ரூபா கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2,500 ரூபா வழங்கப்பட்டவுள்ளது.
நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால பாதீட்டு உரையில் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் தெரிவுசெய்யப்பட்ட 61,000 குடும்பங்களுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டவுள்ளது.
4 மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் முதலாம் திகதி முதல் பெறுமதிசேர் வரி (VAT) 12% இலிருந்து 15% வரை அதிகரிக்கப்படவுள்ளது.



