அரச சேவைகளுக்காக மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

Kanimoli
2 years ago
அரச சேவைகளுக்காக மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

  அரச சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க இடைக்கால வரவு - செலவு திட்டத்தை இன்று நாடாளுமன்ற நிதியமைச்சரின் வரவு - செலவு உரையில் இதனை தெரிவித்தார்.

சுயாதீனமாக செயற்படும் தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றை திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவ சமூகம் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!