ஜனாதிபதியின் இல்லத்திற்கு தீ வைத்த மற்றுமொரு சந்தேகநபர் கைது
Mayoorikka
2 years ago

கடந்த மாதம் 09ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து தீ வைத்து சொத்துக்களுக்கு சேதமேற்படுத்திய மற்றும் சொத்துக்களை திருடிய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கொட்டாவ நகரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரநாயக்க பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



