மீண்டும் அமைச்சுப் பதவியினை ஏற்பதற்குத் தயார்: தம்மிக்க பெரேரா அறிவிப்பு
Mayoorikka
2 years ago

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பொறுப்புகளுடன் கூடிய அமைச்சுப் பதவியினை ஏற்பதற்குத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தாம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தற்போதைய நெருக்கடி நிலைமையினை நிர்வகிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமானால் மீண்டும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியினை ஏற்றுக்கொள்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



