இலங்கைக்கான பயணத்தடையை நீக்கிய இரு நாடுகள்
Mayoorikka
3 years ago
இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தளர்த்திய நாடுகளின் பட்டியலில் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை எதிர்பார்த்ததை விட சிறந்த மீட்சிக்கான அறிகுறிகளைக் காணும் வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க இரு நாடுகளும் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தன.
இதவேளை கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிரித்தானிய அரசாங்கம், இலங்கைக்கான பயண ஆலோசனையை தளர்த்தியதோடு அத்தியாவசிய பயணங்களைத் தவிர ஏனைய பயணங்களுக்கு எதிராக இனி அறிவுறுத்தல்களை விடுப்பதில்லை என்றும் அந்த அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.
மேலும் நோர்வே, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் முன்னதாக இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களை தளர்த்தியமை குறிப்பிடதக்கது.