புதிய கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் வீழ்ச்சி
Kanimoli
2 years ago

புதிய கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கு பதிலாக கையடக்க தொலைபேசி திருத்தப்பணிகள் 118 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தால் இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில் கையடக்க தொலைபேசி தொழில்துறை கடும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



