மட்டக்குளி அலிவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் பலி

மட்டக்குளி அலிவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (29) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
26 வயதான ரணவக்க ஆராச்சிலாகே ஹசித சதுரங்க என அழைக்கப்படும் "அலிவத்தே ஹசித" என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் தொடர்பில் திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிவத்தை பகுதியில் நேற்று (29) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் தற்போது சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
போதைப்பொருள் தொடர்பான திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிடுளர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



